Sunday, June 13, 2010

மனிதமும் மனித நேயமும்

மனிதமும் மனித நேயமும் நாட்டின் இரு கண்கள் ஏனென்றால் மக்கள் நலனைப்பற்றி யோசிக்காத அரசு இருந்தால் அது மக்களுக்கு கேடு. நல்ல அரசு அமைய மக்கள் எப்போதும் யோசிக்க வேண்டும் இல்லையேல் மக்கள் நலன் பாதிக்கப்படும்.  இதற்கு மிகப்பெரிய உதாரணம் இலங்கை அரசாங்கம்.  போரின் வாடை குறையவில்லை இன்னும்.  அங்கே தமிழ் மக்களின் துயரங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது.  அதிலிருந்து மீள நீண்ட நாட்கள் ஆகலாம்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற அடிப்படை தத்துவம் இதற்கு உதவுமா தெரியவில்லை.  ஐக்கிய நாடுகள் சபையும் இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.  தமிழனின் துயர்த்துடைக்க தமிழனே முன் வரவில்லை என்பதே மிகப்பெரிய சோகம்.  இங்கே சில தன்மான சிங்கங்களின் காட்டுகூச்சலை அரசாங்கமும், செய்திதாள்களும், தொலைக்காட்சிகளும் இருட்டடிப்பு செய்கின்றன.

இங்கே ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் ஒளிந்துகிடக்கும் தமிழ்ப்பற்று வெளிக்காட்டமுடியாத  நிலையில் இருக்கிறோம்.  தமிழன் எங்கிருந்தாலும் நலமே இருக்கவே  மனம் ஏங்கும் தமிழன் கூட அமைதிகாப்பது பேரதிசயமாய் உள்ளது.  அவர்களே அமைதிக்காக்கும் போது மக்களின் நிலை கேட்கவே வேண்டாம்.

தமிழும் தமிழ்ப்பற்றும் தமிழனுக்கு குறைந்துவிட்டதோ என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் எழுந்து பல நாட்களாகிவிட்டன.  நாம் ஏதாவது யோசித்தால்கூட அரசுக்கு  எதிராக யோசிக்கிறோம் என்ற நிலையில் யார்தான் இதற்கு பொறுப்பேற்க முடியும். அதேபோல மக்களின் மனநிலையும் நிறையவே மாறிவிட்டகாலம் இது.

நாம் நமது குடும்பம் என யோசிக்கும் முதல் குடும்பமும் அதன் வழி மக்களும் என்பதே இன்றைய நிலை.  தமிழ் வாழ தமிழ்நாடு வாழ நாமெல்லாம் தமிழராய் வாழ நடக்க இருக்கும் உலகத்தமிழ் மாநாடாவது உலகத்மிழனை பற்றி சிந்திக்கட்டும். உலகத்தமிழ் மாநாடு தமிழ் மக்களின் நல்வாழ்வை பற்றிய சிந்தனை சிறிதளவாவது இருந்தால் உளமார மகிழும் தமிழன் எழுதியது. நன்றி 

1 comment:

  1. பார்ப்போம் நண்பா .. மாநாடு முடியட்டும்..!

    ReplyDelete